About Kongu Kulam

ஆந்தைக்குலம்

வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தார்கள் என்பது கற்பனை. திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக் கொண்டவர்கள். மோருர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். வேணாடர்களுக்கு வெற்றியைத் தேடிதந்தனர்.காங்கேயன் அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர் கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை அணிவித்தான். கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி, மாணிக்கம் பாளையம், பட்டணம், பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் , திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி, ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியான் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.

Copyright © 2024 Global Kongu Foundation All rights reserved.