கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி, கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலனி இடங்களாம்.