சேர, சோழ பாண்டிய மன்னர்கள் கொங்கு நாட்டை அவ்வப்போது ஆண்டனர். சேர நாட்டுக்குள் கொங்கு நாட்டை அடக்கி 250 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள் சேரர்கள். அந்துவன் சேரர் வழிமுறையில் கலந்தவர்கள் அந்துவன் குலத்தினர். கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். அவன் மாமன் இரும்பிடர்த்தலையர். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர். சேர, சோழ பாண்டியர் மூவருக்கும் பெண் கொடுக்க முடிசூட, வாள்கொடுக்க, உரிமை பெற்றவர்கள் கொங்கு வேளாளர்கள். வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்தவர்களையே கொங்கு நாட்டு ஆட்சி நடத்த விட்டனர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றது புறம். தென்னாட்டுத் தமிழர் தாம். சேர, சோழ பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய தொடர்பினர். பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள். "கன்னடமும், தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துதித்து எழுந்து ஒன்றுபல ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை. கொங்கு வேளாளர்களே சேரமரபினர் ஆகி இருக்கலாம்
- உதியன் யசேரனுக்கும், கொங்கு வேளாளர் வெளியன் வேண்மான் மகள் நல்லினிக்குப் பிறந்தவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் (பதிற் I )
- பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் நார் முடிச்சேரல் (பதிற் II)
- வேளாவிக் கோமான் தேவிக்கும், நார் முடிச்சேரனுக்கும் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதிற் III)
- அந்துவன் குலத்துப் பொறையன் பெருந்தேவிக்குப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வழியாதான் (பதிற் IV)
- செல்வக்கடுங்கோவிற்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை (பதிற் V)
- குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செல்விக்கும் பிறந்தவன் இளஞ்சேரலிரும்+பொறை. (பதிற் V)
கடைச்சங்க கால எட்டுச்சேர அரசர்களில் ஆறுபேர் கொங்கு வேளாளப் பெண்களின் மக்கள் ஆவர் என்பதை பதிற்றுப் பத்து கூறுகிறது. இவர்களைப் பாடியவர்கள் பலரும் கொங்கு வேளாளர்களே. அதனால் சேரன் குலத்தினர் சேர மரபினர் எனலாம். குளித்தலை வட்டம் மதில்கரைச் செல்லாண்டியம்மன் சேரர் குலத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலை, கொற்றனூரிலும் கட்டினர். இந்தச் சேரன் குலப்பெண் கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உடன் கட்டை ஏறினாள். வீர மாத்தியம்மன் தீப்பாய்ந்தம்மன் நாமக்கல் நகரிலும் உள்ளது. சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர். காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர். நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். சேரன் செல்வக் கடுங்கோவைக் கபிலர் சந்தித்த இடம், நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர். கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர், கோனூர், சிற்றாளத்தூர், நாமக்கல், சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம்.