காரி என்பது கருமை நிறக் குதிரை என்று பொருள் கூறினார். உ.வே.சா. ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்றார். காரிக்குதிரைகளை வைத்திருந்த சிறப்பால் மலையமான் காரி எனப்பட்டான். ஓரி நிறக்குதிரை வைத்த சிறப்பால் அவன் ஓரி எனப்பட்டான். இவை காரணப் பெயர்கள். காரி மழவர் குடியினன். ஓரியுந்தான். காரி வழியினர், காரிக்குலத்தார் அல்லர். கருப்பின் கண்மிக்கது அழகு என்பர். கருமை நிறமுடைய திருமால் காரி எனப்பட்டார். சங்க காலத்தில் காரிக்கண்ணனார் என்ற கொங்கு வேளாளப் புலவர் இருந்தார். அவர் வழியினரே காரிக் குலத்தவர். உஞ்சணை, சேமூர், ஆனங்கூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, நல்லிபாளையம், ஆகிய ஊர்களை காரிக் குலத்தினர் காணியாகக் கொண்டனர்.