About Kongu Kulam

கீரன்க்குலம்

சங்க காலப் புலவர்கள் பலர் நமது இனத்தினர். கீரன், நக்கீரன், கீரனார் இவையெல்லாம் இடு குறிப் பெயர்கள். கீர்+அன் என்று பிரித்தல் தவறு. பொருளற்ற வேர்ச் சொல் தமிழில் இல்லை. நாமக்கல் வட்டத்தில் உள்ள கீரனூர் தான் கீரம்பூர் ஆகியது. நக்கீரரை, அந்தணர் என்று தவறாகக் கூறுகின்றனர். கபிலர் தன்னை `அந்தணன் புலவன்` என்று செல்வக்கடுங்கோவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். கீரன் மரபிலே வந்தவர்கள் கீரன் குலத்தினர். காங்கேய நாட்டுக் கீரனூர் இவர்களின் முதற்காணியாகும். நசியனூர், கோடத்தூர், கண்ணிவாடி ஆகிய பிற ஊர்கள் இவர்களின் காணி ஊர்களாம்.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.