கொங்கு நாட்டு ஊர்களை மணியம் செய்தவர்கள் மணியன் குலத்தவர்கள் ஆனார்கள். கரூரை காணியிடமாகக் கொண்ட மணியன் குலத்தவர் காங்கேயம், முத்தூர், மணியனூர், மோகனூர் என கொங்கு நாடெங்கும் பரவி விரவி உள்ளனர்.இவர்களின் காணி தெய்வம் (குல தெய்வம்) மோகனூர் நாவலடியான், ஒருவந்தூர் செல்லாண்டியம்மன், காளியம்மன் ஆகிய தெய்வங்களாகும். முத்தூர் மணியன், மோகனூர் மணியன் இருவரும் ஒருகுடியின் பங்காளிகள் ஆவர். மோகனூர் மணியனின் கிளை தான் முத்தூர் மணியன் ஆவர். ஓடத்துறை ராஜாவை குலதெய்வமாக கொண்டவர்கள் ஓடத்துறை மணியன் ஆவர். இங்கிருந்து கிளைத்து தழைத்தது தான் இடையாறு ராஜாவை குலதெய்வமாக கொண்ட இடையாறு மணியன் ஆவர். இவர்களில் இருந்து கிளைத்தவர்கள் துக்காச்சி மணியன் ஆவர். காங்கேய நாட்டு காணிப்பாடல் ஓன்று நத்தக்காடையூர் முதன்மைக் காணியாளராக மணியன் குலத்தினரை குறிக்கிறது. அப்பாடல்: "அரசர் புகழ் தென்காணியூர் அதில் வரும் மணியனை" என்ற பாடலாகும். கரூர், காங்கேயம், மோகனூர், முத்தூர், கோடந்தூர், இடையாறு, துக்காச்சி மணியனூர், நல்லிபாளையம், நாமக்கல் ஆகிய ஊர்கள் காணி ஊர்களாகும். மகவனூர் மோகனூர் ஆனதை, "செந்நெல் முறி முகவனூர்" என்ற காணிப் பாடல் கூறுகிறது. மணியன் குல தேனாயி என்ற குமரிப்பெண் மோகனூர் சிவனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டதால் அம்மன் தெய்வம் "தேனாயி குமரியம்மன்" என்று அழைக்கப்படுகிறார்.
முத்தூர் மணியர்கள் தென்னிலைப் போரில் வெற்றி வாகை சூடியதால் முத்தூரை தங்கள் காணியாகப் பெற்றனர். போரில் வெல்லும் திறன் பெற்ற இவர்கள் பழையகோட்டையையையும் வென்று ஆட்சி புரிந்தனர். இவர்கள் குப்பியண்ணசுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.