"ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாளர்கள். வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பெண்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா, சீதனம் கொடுக்க? வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர். ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான், வெற்றிப்பெற்றான். சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான். வடுகநாதர் கோயில், பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள். சோழன் தோழன் பெருமாள் ஓதாளன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும். கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி, பெருந்தொழுவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாளர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.