பண்டு, தொன்மையைக் குறிக்கும் சொல், பாண்டு என்பது ஒரு நோய். கொங்கு நாட்டுக் கொடுங்கூர். கொடுமுடி திருப்பாண்டிக் கொடுமுடி எனப்படுகிறது. பண்டி - வயிறு, பண்டிதர் நோய், தீர்ப்போன் புலவன் என்று பொருள் தரும். பண்டிதம் செய்வான் என்ற கலித்தொகைத் தொடர் எருது பூட்டி வண்டி ஓட்டுவான் என்று பொருள் தரும். கொங்கவள் பாண்டியஞ் செங்கதிர் என்று பெருங்கதை கூறும். மாலையணிந்த மணித் தொழில் பாண்டியம் என்றும் கைபுனை பாண்டியன் கட்டளை பூட்டி என்றும் கொங்குவேள் கூறுகின்றார். வேப்பம்ப்பூ மாலை அணியும் பாண்டியர் வேறு. பாண்டு பூட்டி உழுகின்ற பாண்டியர் வேறு. இது இடுகுறிப்பெயர் காரணம் தேட வேண்டாம் பொள்ளாச்சி, சத்தியமங்கலம், நசியனூர், புன்னம், கொடுமணம், கொங்கணாபுரம், பாலமேடு ஆகிய ஊர்கள் பாண்டியர் குலத்தினர் காணியூர்களாம்.