கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை, மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பாதுகாத்தவர்கள். பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன் எனப்பட்டான். வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான். பெருநிலக் கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர். பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு படைமக்களாக இருந்தனர். குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார் வாழ்ந்தனர் என்று வாலசுந்தரக் கவி கூறுவார். இருவருக்கு கொங்கு மண்டல சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம். பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர் என்று நூற்பாயிரம் கூறம். பண்ணை குலத்தோர் பண்ணைக்கீரை உண்ணார். பண்ணைகுல சடையப்ப வள்ளல் இராமாயணம் பாடக் கம்பருக்கு உதவினான். நாமக்கல் மாவட்டம் ஏழூர் மும்முடிச் சோழமண்டலம் எனப்பட்டது. இதுதான் பண்ணைக் குலத்தாரின் முதற்காணியூராகும் ஏழூர் நாடு தலைநகராக இருந்தது. 3 ஊர்கள் அதில் அடங்கியிருந்தது. பல ஆண்டுகள் இதனை ஆண்ட காரணத்தால் நாட்டார் எனப்பட்டனர். ஏழூர் நாட்டுக் கவுண்டர்களின் குலதெய்வம் பண்ணையம்மன், கொங்கு 24 நாட்டார்களும் இவர்களை முன்னிலைப் படுத்தியே மணச் சடங்கைத் துவக்கினர். நாட்டுக்கல் வழிபாடு இதன் காரணமாகவே வந்தது. வெளியன் குலத்தார் ராசிபுரத்தில் இருந்தனர். மோரூர் கண்ணன் குலத்தார், பருத்திப் பள்ளி செல்லன் குலத்தார் ஆகியோர்களுக்கு வெளியன் குலத்தார் பெண் கொடுத்தனர்; கட்டினர். பொருளந்தையர் ஏழூரை ஏற்றதால், பண்ணையர் கொங்கெங்கும் பரவினர். பண்ணைக் குலத்துக் காலிங்கராயன் அவன் பெயரால் கால்வாய் அமைத்தான். ஈரோடு வட்டத்தில் ஏழூர், கீரம்பூர், அனுமன் பள்ளி, கரூர், தும்மங்குறிச்சி, தாழம்பாடி, வாழவந்தி, ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின் காணியூர்களாம்.