About Kongu Kulam

பெருங்குடி குலம்

வாங்கல், காங்கயம், புலுசைக்கரை, மணித்திடல், கடத்தூர், களத்தூர், சேலம், புடாரமங்கலம், எருக்கிலைப்பாடி, கார்குழல், வளவநல்லூர், எருமைப்பட்டி, பீடம்பள்ளி, செவியூர், ஆரியூர், முருங்கத்தொழு, குடந்தை, திருமலை, விருப்பாட்சி, கொன்னையாறு, கண்டகுளம் ஆகிய ஊர்கள் பெருங்குடிகுலக் காணியூர்களாகும்.

சீர்மேவு திருவளர் வாங்கல்நகர் காங்கயம்
செய்புலுசைக் கரைநகருமாம்
செயமணித் திடல்கடத் தூர்களத் தூருடன்
சேலம் புடாரமங்கை
போர்மேவு தென்எருக் கிலைப்பாடி கார்குழல்
பெயர்வளவ நல்லூருடன்
பெருமைஎரு மைப்பட்டி அதிகபீ டம்பள்ளி
பேரான செவியூருடன்
தார்மேவு ஆரியூர் தென்முருங் கைப்பதி
தழைத்திடும் குடந்தையுடனே
தரணிபுகழ்த் திருமலை விருப்பாட்சி குன்றையார்
தருகண்ட குளமதுடனே
கார்மேவு கைத்தலன் மால்பெருங் குடிமோழை
கண்மணிய தாகவந்த
கனநல குமரதென் பிள்ளைக் குமாரனுட
கனிவுமிகு காணியிவையே.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.