பூசல் என்பதே பூசன் ஆனது, போர் செய்வதையே பூசல் என்றனர். புறத்துறையில் `வெட்சி நிரை கவர்தல் ` என்று வெட்சித் திணை கூறும். இதில் பூசல் மாற்று என்ற துறை உள்ளது. ஆநிரை கவர்ந்தார் பூசல் செய்கின்றனர். இதை மாற்றி ஆநிரை மீட்போர் பூசல் செய்வர். மீட்டல் கரந்தைத் துறையாகும். `புலம் பெயர்ந்தொளித்த கலையாப்பூசல்` (பதிற் - 44 -12 கூர் மன்னன் பூசலை செங்குட்டுவன் அடக்கினான்.
`கை சுமந்தாலும் பூசல் மாதிரத்து` (பதிற் - 31 - 3)
`சிறை பொள் பூசலில் புகன்ற ஆயம்` (பதிற் - 30-19)சிறுபோர் பூசல். பெரும்போர் அமர் என்கிறது இலக்கியம்
போரில் வல்லவர்கள் பூசன் குலத்தினர். மாதிரத்துப் பூசல் செய்பவர். களப்பிரர் தொண்டை மானை சிறை வைத்தனர். பூசன் குலத்தினர் போரிட்டுச் சிறைத் தகர்த்து விடுதலை செய்தனர். தொண்டைமான் என்ற பட்டத்தைப் பெற்றனர் வாலச்சந்திர கவி இதனைக் கூறினார். வேணாவுடையாக் கவுண்டர் தென்கரை ஆண்டபோது அச்சுதராயன் மகன் வண்டியில் வந்தான். காடை, பூச, சேரன் ஆகிய கூட்டத்தினர் எதிர்த்தனர். 12 ஆண்டுகள் சிறை வைத்தான். பூசன் குலத்தார் எதிர்த்துக் கேட்டனர். ராயர் வீரத்தைப் பாராட்டி `மேதகு` என்ற பட்டம் அளித்தான். சொல்லாண்மை திகழ் பூசர் என்று அழகுமலைக் குறவஞ்சி கூறும். மூலனூர் பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம். ஆவணம் கூறுகிறது. மூலனூர், புதுப்பை, பகுவாய், அழகாபுரி பெற்றப்பள்ளி, தொண்டாமுத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின் காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம்.