About Kongu Kulam

பொருள்தந்தகுலம்

கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது. செத்தும் கெடுத்தான் சீதக்காதி. இவனும் பொருள் தந்தவன்தான். கடையேழு வள்ளல்கள் பொருள் தந்தவர்களே. ஆய், நள்ளி, பேகன், ஆகியோர் மாரியன்ன கொடை கொடுத்தவர்கள். பசித்துவந்தவர்களுக்கும், யாசித்து வந்தவர்களுக்கும் வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர். ஆந்தை குலம் பிறழந்து பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை. பொருள்தந்த குலத்தினர் பலபிரிவாகப் பிரிந்து போயினர். பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள். கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர். ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர். கட்டி, நல்லகட்டி, கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே, கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம், பிடாரியூர், காடையூர், முத்தூர், தோட்டக்குறிச்சி, கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி, ஆறுதொழு, ஆலம்பட்டி, பரமத்தி, புன்னம், பவுத்திரம், தென்பள்ளி, ஆகியன பொருள் தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம்.

Copyright © 2024 Global Kongu Foundation All rights reserved.