புறத்தில் நான்கு பாடல்கள் சாத்தன் பற்றி கூறுகிறது. கொங்கு நாட்டுப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் கொங்குக்கவுண்டர்.
அந்துவன் சாத்தன் என்ற அரசனைப் பற்றி புறம் – 71 கூறுகிறது.
பெரும் பெயர்ச் சாத்தன் என்கிறது புறம் - 173 கூறுகிறது.
ஒல்லையூர் கிழான் பெருஞ்சாத்தனை புறம் 242 கூறுகிறது.
வல்வேல் சாத்தன் என்கிறது அது.
சாத்தன் தந்தை என்பதே சாத்தந்தை ஆக்கும். சால் தந்தை சாற்றந்தை என்றே ஆகும். இவ்வாறு பிரித்தல் தவறு. கொங்கு மண்டல சதகம் சாத்தந்தையார் முதற்காணி அத்திபநல்லூராகும். சாத்தந்தையம்மன் இவர்களின் குல தெய்வமாகும். சோழன் சார்பில் சரவணமகீபன் வேட்டுவர்களை வென்று அள்ளாளப்புரி, உகையனூர் ஆகியவர்களைக் கைப்பற்றினான் சோழன். "உலகுடைய மன்றாடிப்" பட்டம் நல்கினான். விரராஜேந்திரன் காலத்தில் பிள்ளான் தேவன் என்ற சாத்தந்தைக் குலத்தானுக்கு கொடுகூர் ஆட்சியை அளித்தான். கொடுங்கூர், கொடுமுடியாகும். பூந்துறை வேட்டுவர்களை வென்றனர்.
சாத்தந்தையர். உலகபுரம், கனகபுரம், தேவனாம்பாளையத்தையும் பெற்றனர். சாத்தந்தைக் குலத்தில் கந்தான் காலிங்கராயன் ஊத்துக்குளி பாளையப்பாட்டின் முதல்வன் இவன். வெள்ளோட்டில் ஆட்சி நிறுவியவன். இவன் வீரபாண்டியனின் அமைச்சனாக இருந்தான். காலிங்கராயன் வாய்க்காலை அமைத்து பூந்துறை நாட்டை வளமை செய்தான். அது இன்றும் காலிங்கராயன் வாய்க்கால் என்றே அவன் புகழ் பாடி ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளோடு முத்தையக் கவுண்டர் சந்திர சூரியர் உள்ளவரை சாத்தந்தைக் குலத்தவர் கம்பரின் தமிழுக்கு அடிமை என்று சாசனம் தந்தனர். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் சாத்தந்தைக் குலத்தவரே, வெள்ளோடு, நாகம்பள்ளி, கூகலூர், விஜயமங்கலம், குன்றத்தூர், அல்லலாபுரம், கூடலூர், உகையனூர், காங்கேயம், இலவமலை, பாலத்தொழு, கருவேலம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம், ஆகியன சாத்தந்தைக் குலத்தார் காணியூர்களாம்.