About Kongu Kulam

செம்பூதன்குலம்

கொங்கு நாட்டுப் பறவைகளில் செம்போத்து கருமையில் செம்மையானது. வெயில் நுழை பறியாக் குயில் நுழை பொதும்+பரில் வாழ்வது. கொங்கு நாடெங்கும் மிக்க காணிகளைப் பெற்ற இவர்கள் புகழ் பூத்த செம்பூத்தர் எனப்பட்டனர். இது செம்பக்குலத்திலிருந்து ஒழிய காரணம் பெயரன்று. போத்து, பூத்து என்ற சொற்பொருள் தேவையில்லை. செம்பூத்தான் குழந்தைலன் அன்னமிட்டுப் புகழ் பெற்றான் என்று சதகநூல் கூறும். இரத்தின மூர்த்தி எழுதிய விறலி விடு தூதும், நல்லக் குமாரக் கவுண்டர் சிறப்பும் உணர்த்தும். தீரன் எனும், செம்பூத்தன்என்ற குலத்திலகன் தென்பொதிகை கும்பன் எனும் நல்லக் கவுண்டர் என்று கூறுகிறது. செம்பூதன், செம்பூத்தர், செம்போத்து, செம்பூத்தை செம்பூற்று, என்பன எல்லாம் ஒன்று தான். செம்பூற்றதிபன் என்று கல்வெட்டுத் தொடர் உள்ளது. செம்பூத்தான் குலத்தார்க்குரிய காணியூர்கள் பற்றிய காணிப்பாடல்கள் உண்டு. அதில் கூறப்பட்ட ஊர்களின் பட்டியல் தரப்படுகிறது. இரணபுரம் மண்டபத்தில் அத்தனூர் வயிரூசி, குமாரமங்கலம், அந்தியூர், இராமக்கூடல், காடனூர், கண்ட குல மாணிக்கம்பாளையம், கீரம்பூர், தாராபுரம், தென்சேரி, விதரி அத்திபாளையம், சேமூர், மொஞ்சனூர், கூடச்சேரி, கருமானூர், புல்லூர், சிவதை, வாழவந்தி, உத்தம சோழபுரம், புத்தூர் திண்டமங்கலம், வைகுந்தம், முடுதுறை, கொற்றனூர் ஆகிய ஊர் செம்பூத்தனாரின் காணியூர்களாம். கொல்லிமலை சூழ்ந்து 88 ஊர்களுக்கும் செம்பூத்தார் காணியாளர்களாம்.

"இனிய ஒன் கொல்லிமலை எண்பத் தெட்டூருக்கும்
இறைவனே செம்பூதனே" என்று காணிப்பாடல் கூறும்.

வேட்டம்பாடி, வேலூர், காதப்பள்ளி, வீசானம், தோகைநத்தம், தாராபுரம், தம்மம்பட்டி, தாளப்பதி, கொங்கணாபுரம், வாழவந்தி, தோளூர், தாளப்பறி, ஆகிய ஊர்களும், செம்பூத்தான் குலத்தினர் காணியூர்களாம்.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.