கண்ணக்குலத்தார் வேறு, செங்கண்ணக் குலத்தார் வேறு, குளித்தலை வட்டாரமான தென்கரை இராச கம்பீர வளநாட்டின் முதற்குடியாக செங்கண்ணன் குலத்தினர் வாழ்ந்தனர். சோழ வேந்தன், செங்கணான் மரபினர் என்றும் கூறலாம். கடம்பன் குறிச்சி, சிதம்பரம் சிராமலை ஆகியன பண்டைய காணிகளாம். இக்குலலிங்கக்கவுண்டன் ஆதித்த சோழன் காலடியில் வைத்தான்; "பல்லவராயர்" என்ற பட்டத்தை சோழன் வழங்கினான். கொங்கு நாட்டின் ஆளுமையையும் அளித்தான். காங்கேய நாட்டுக் காணியாள் வேல கவுண்டர். மகளைத்தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான். சீதனமாகக் கங்கேயத்தைப் பெற்றனர். தலைநகரை மாற்றினர். காங்கேயத்தில் அகிலாண்டபுரம் அமைத்து அகிலாண்ட வல்லி அம்மனை வைத்து வழிபட்டனர். கோட்டை கட்டி ஆட்சி புரிந்தனர். அம்மன் கோவில் கட்டினான். செங்கண்ணர் கொங்கு நாட்டை ஆண்ட போது சோழனுக்குத் திறை செலுத்தினர் (கப்பம்) குறுநில மன்னர்களான இவர்கள் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றனர். செங்கண்ணர்க் குலத்தினர் மெய்க்கீர்த்தி இதைத் தெரிவிக்கும். யானை தேர்தந்த கரிகால் வளவனுக்கும் சூட்டிப் பெருமை பெற்றனர். மதன செங்கண்ண குலமால் - மதியூகி சிற்றழுந்தூர் சிங்கையம் என்ற வாலசுந்தரக் கவி கூறுகின்றார். காங்கேயப் பல்லவராயன் மகனுக்கு மணி பதித்த வண்டியை, சங்கிராமம் சோழன் அளித்தான். அச்சிறுவன் தமிழ்ப் புலவருக்கு அளித்தானாம், இதனை கார்மேகக் கோனார் கொங்கு மண்டல சதகத்தில் கூறினான். அகிலாண்டபுரம், கொடுமுடி, கண்ணபுரம், கடம்பன் குறிச்சி, இவர்களின் காணிகளாம்.