தூர் என்பது நெல்பயிர் திரண்டிருப்பது. கிணறு ஏரியில் நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம். வேளாண்மையில் தூர் கட்டி நெற்பயிர் வளர்த்தால் விளைச்சல் பெருகும். வரப்புயர நெல்உயரும் என்றார் அவ்வையார். உழவுத்தொழிலை உழைப்பால் மிகுதிப்படுத்தி அதிக நெல் விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர். துவரை தூரன் ஆகாது. கபிலர் பாடிய புறத்தில் வேளிருள் புலிகடிமால், இருங்வேள் ஒருவன், இவன் கொல்லிமலை அடி வாரத்தை ஆண்டவன். கபிலர் இங்கு வந்து பாரி மகளிரை மணந்து கொள்ளக் கேட்டார். இன்று சிவன் ஆண்ட ஊர் புலிக்கரட்டுப் புதூர் எனப்படுகிறது. இவனது புலிக்குத்திக்கல் சேலம் தொல்பொருள் துறையில் உள்ளது.
துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது. கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர். ஈரோடு, வெள்ளக்கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின் முதம்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது. வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர். தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.
காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு, தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மேழிப்பள்ளி, அண்ணாமாரையும், குமாரமங்கலம் அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர். குமாரமங்கலம், பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம், கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம். பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர்; கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர்.