முதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன் ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி வந்த வேளாண் பெருமக்கள், வெண்டுவன் குலத்தார் என்று அழைக்க பெற்றிருக்கலாம்.
டி.எம்.காளியப்பா “வெண்டுக்காய்” எனபது வெண்டைகாயின் பெயர்.வெண்டைகாயை அடையாள சின்னமாக கொண்டவர்கள் வெண்டுவ குலத்தார் என்று கூறுகிரார்.அவர் வெண்டுவ குலம் தவிரக் கொங்கு வேளாளர் சமூகத்தில் ‘வெண்டுஉழவர் ‘குலம் என்று ஒன்று தனியாக உள்ளதாகவும் கூறுகிரார்.’வள்ளிபுரம் மட்டும் அவர்களது காணியூர் என்கிறார்.
ஒரு சிலர் வெண்டுழவர் என்பதை வெண்டுவர் என தவறாக உச்சரித்திருக்கலாம்.வெண்டுழவர் குலம் எங்குமே இல்லை. நல்.நடராசன், ‘வேள்+உழவர்’ என்ற சொல்லே வெண்டுவர் குலம் ஆயிற்று என்று கூறுகிரார்.அவ்விரு சொற்கள் ‘வேளுழவர்” ஆகுமே தவிர வெண்டுவர் என ஆகாது. தெ.ப.சின்னசமி வான் மழையை “வேண்டுவோர்” வெண்டுவர் ஆனார்கள் என்று கூறுகிறார். கு.சேதுராமன்,வெண்டைகாயை விளைவிப்பதில் வல்லவர்கள் என்று கூறுகிறர். பிறர்க்காக வெண்டைகாய் விளைவிக்கும், வெண்டுவன் குலத்தார், வெண்டைகாயை உண்ண மாட்டார்கள் என்று கூறுகிறார்.