தன் உழைப்பால் நவ தானியங்களையும் விளையவைக்கின்றானே. அதனால் தான் விளையன் குலம் என்றனர். பிற விளக்கம் தேவையில்லை. விலைபோகாத வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலை போக மாட்டார்கள். மானத்தைக் காக்க உயிரை விலையாகக் கொடுப்பர். தலைய நல்லூரை முதற்காணியாகக் கொண்ட விளையன் குலத்தார் கொங்கு எங்கும் பரவினாலும் நாமக்கல், திருச்செங்கோடு, பகுதியில் நிறைந்துள்ளார். முத்துகாபட்டியில் அனைவரும் விளையங் குலத்தார்கள். சிலர் மட்டும் செம்பூத்து மணியன் குலத்தார். செல்லாண்டியம்மனை வணங்கினாலும் குல தெய்வமாக அண்ணன்மார் சாமிகளையே வைத்துள்ளனர். மின்னாம்பள்ளி ஆத்தூர், மன்மங்கை, ஆரியர், குமாரமங்கலம், பஞ்சமாதேவி, சென்னிமலை, சேலம், இடைப்பாடி, கொன்றையாறு, சாத்தனூர், துத்திக்குளம், பொங்கலூர், ஆகிய ஊர்கள் இவர்களின் காணியூர்களாம்.