History of Kongu Nadu

கொங்கு மண்டலம்

கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் ஆண்டான். 13-ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலம் என்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்த்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7-ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது. 13-ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால அமைப்புப்படி கோவை, சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன.

கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு, காங்கேயம், கரூர், விஜயமங்கலம், அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி, காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அதமன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம், பெரும்பாலை, சோழப்பாவு, தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300அடி, சங்ககிரி - 1500அடி, சதுரகிரி - 3048அடி, கனககிரி - 3423அடி, மகாராசக்கடை - 3383அடி, தட்டைக்கல் துர்க்கம் - 2029அடி. இரத்தினகிரி - 2800அடி, சூலகிரி - 2981அடி, ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம். 14-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15-ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுக்கல், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.

கொங்கு 24 நாடுகள்:

  • பூந்துறை நாடு - ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்
  • தென்கரை நாடு - தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்
  • காங்கேய நாடு - தாராபுரம், காங்கேயம் பகுதிகள்
  • பொங்கலூர் நாடு - பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்
  • ஆரை நாடு - கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்
  • வாரக்கா நாடு - பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்
  • திருஆவின் நன்குடி நாடு - பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்
  • மணநாடு - கரூர், வட்டம் தெற்கு பகுதி
  • தலையூர் நாடு - கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்
  • தட்டயூர் நாடு - குளித்தலை வட்டம்
  • பூவாணிய நாடு - ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்
  • அரைய நாடு - ஈரோடு, நாமக்கல், பகுதிகள்
  • ஒடுவங்கநாடு - கோபி வட்டம்
  • வடகரைநாடு - பாவனி வட்டம்
  • கிழங்கு நாடு - கரூர், குளித்தலை வட்டம்
  • நல்லுருக்கா நாடு - உடுமலைப்பேட்டை
  • வாழவந்தி நாடு - நாமக்கல் வட பாகம், கரூர்
  • அண்ட நாடு - பழனி வட்டம், தென்கீழ்ப்பகுதி
  • வெங்கால நாடு - கரூர் வட்டம், கிழக்குப்பகுதி
  • காவழக்கால நாடு - பொள்ளாச்சி வட்டம்
  • ஆனைமலை நாடு - பொள்ளாச்சி தென்மேற்கு
  • இராசிபுர நாடு - சேலம், ராசிபுரம், கொல்லிமலை
  • கஞ்சிக் கோயில் நாடு - கோபி, பவானிப் பகுதி
  • குறும்பு நாடு - ஈரோடுப் பகுதி

மலைகளும் கோட்டைகளும்:

  • அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை
  • கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை
  • பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை
  • உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை
  • பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை
  • தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை
  • ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை
  • கோபி - தவளகிரி, குன்றத்தூர்
  • பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை
  • கொள்ளேகால் - மாதேசுவரன் மலை
  • திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு
  • இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை
  • சேலம் - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி
  • நாமக்கல் - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை
  • கரூர் - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை
  • பழனி - ஐவர் மலை, பழனி மலை, கொண்டல் தங்கி மலை

Gallery


Event & News


Mangala Valthu


Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.